ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

துறவு பூண்ட உறவுகள் (735)

துறவு பூண்ட உறவுகள் செல்வி நித்தியானந்தன்

குடும்பம் என்ற
கூடு
குதூகலம் அடைந்த
வீடு
குண்டு வீச்சால்
பிளவு
குட்டிச் சுவரான
வளவு

சந்தோசம் பறிபோன
தொல்லை
சஞ்சலமே அகத்தின்
எல்லை
சகதி மிதித்த
அவதி
சான்றுதல் கிடைத்ததே
அகதி

காலைமாலை வேலை
ஓட்டம்
கனதியான வாழ்வின்
நாட்டம்
காசு காசு என்றதொரு
தேட்டம்
கடைசிவரை தொலைத்த
கூட்டம்

பற்று அற்ற
பாசம்
பணம் என்றால்
வேசம்
பார் எங்கும்
நாசம்
பார்த்தாலே முகத்தை
திருப்பும் தேசம்

செல்வி நித்தியானந்தன்

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading