” துறவு பூண்ட உறவுகள் “

ரஜனி அன்ரன் ((B.A) “ துறவு பூண்ட உறவுகள் “ 30.10.2025

துறவு என்பது வெறுப்பல்ல
உறவை வெறுத்து பேரன்பின் எல்லைகாண
படகாய் இருந்த உறவுப்பற்றை வெறுத்து
பந்தபாசம் தனைஒறுத்து
இனிமை வாழ்வு கசந்துபோக
துயரக்கலவை வாழ்வை அணைக்க
உறவுச்சங்கிலியும் அறுந்துபோக
துறவினைநாடி பரமனை அடைவார் துறவிகள் !

தூரதேசம் தன்னில் துறவுபூண்ட உறவுகளாய்
உறவுகளுக்காய் ஆசாபாசம் துறந்து
அல்லும்பகலும் அயராது உழைத்து
குடும்பத்திற்காகவே தம்மையொறுத்து
துறவிகளாகவே வாழ்வினைத் தொலைத்து
பிறவிப்பயனின் பெருமைபேணும்
இளைஞர்கள் வாழ்வும் கேள்விக்குறியே !

உதிரும்சருகாக உறவுகளும் ஓர்நாளில் பிரிய
பிரிவுத்துயரும் மனதைவாட்ட
புன்னகைபூத்த நினைவுகளெல்லாம் சுமையாக
நிலையில்லாத வாழ்வில் துறவே நிலையாம் !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading