20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
” துளிர்ப்பாகும் வசந்தம் “
ரஜனி அன்ரன் (B.A) “ துளிர்ப்பாகும் வசந்தம் “ 03.04.2025
வண்ணக் கதிரவன் ஒளிவீச
வாடையும் மெல்ல விலகிட
தருக்களெல்லாம் கருக்கொள்ள
மொட்டுக்கள் முகையவிழ்த்து
மலர்வனமாய் வனப்பூட்டும் வசந்தம்
மனதிற்கு மகிழ்வூட்டும் தருணம் !
வசந்தம் துளிர்ப்பானால்
வாழ்வு முழுமையும் புதுமையே
துளிர்க்கும் இலைகளும் இசைபாட
துள்ளிக் குதிக்குமே மனமும்
பச்சை கனிந்து மலர
இச்சை கொள்ளுமே மனமும் !
பனித்துளிகள் மலர்களை நனைக்க
பட்சிகள் இராகம் இசைக்க
மலர்கள் திறந்து முகம்காட்ட
மழைத்துளியும் மலர்களை முத்தமிட
பூமகள் மேனியைப் பூக்களும் அழகாக்க
மேதினியே ஜொலிக்குது வசந்தத்தாலே
துளிர்ப்பாகும் வசந்தம்
நல்மனங்களை வனப்பாக்கட்டும் !
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...