துளிர்ப்பாகும் வசந்தம்

ஜெயம்
மண்ணிலே மகிழ்ச்சியை கொண்டுவர துளிர்ப்பாகும் வசந்தம்
கண்ணிலே எழிலை புகுத்தும் இயற்கையின் வனப்பும்
வண்ணமாய் மலர்கள் மலர்ந்து வீசிடும் சுகந்தம்
எண்ணில்லா சுகத்தை படைத்திடும் காட்சிகளின் விருந்தும்

எங்கும் பச்சை பசுமையென தரணியின் கோலம்
பொங்கும் உற்சாகத்துடன் உயிரினங்கள் வரவேற்றிடும் காலம்
அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்பம் வாழ்க்கையில் மூளும்
மங்கிய மேனிக்குள் பிரகாசத்தை பாய்ச்சிடும் நாளும்

சூரியன் கண்திறந்ததைக் கண்டு மரங்களின் கொண்டாட்டம்
வேரினை ஆழமாய் ஊன்றி துளிர்விடுவதில் நாட்டம்
பாரின் அழகை வசந்தம் வந்தே கூட்டும்
தூரிகைகொண்டு அற்புத வண்ண ஓவியம் தீட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading