தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

தேவ கஜன்

அன்பே! உந்தன்
பிரிவின் பெருவலி
பெருகி பெருகி
உருகி போகின்றேன்.

பிரிதல் மருகி
புரிதல் மெருகி
பிரியம் கொள்வாயென
பேராவலாய் காத்துக்கிடக்கிறேன்.

ஏன் இந்த பிரிதல்?
ஏன் இந்த நெருடல்?
என்று நீ நினைத்திருந்தால்
நிட்சயம் என்னை நீ!
பிரிந்திருக்கவே மாட்டாய்.

உன்னையே உயிராக
நேசித்த நான்
உன்னோடு வாழ்க்கை எப்போ?
தொடங்குமென்று ஆவலாய்
காத்திருக்க நீயோ!
ஆறாத ஆவலாய் ஆக்கிவிட்டாய்.

நான் உன்மேல்
கொண்ட காதலுக்காய்
நீ தந்த பரிசு என்னவோ
பிரிதலென்ற பேரவலம்தான்.

என்னை பிரிந்துவிட்டதாக
நீ நினைக்கிறாய் ஆனால்
உன் இதயத்தை இன்றும்
நானே சுமந்தபடி இருக்கின்றேன்
என்றோ ஒர் நாள் எந்தன்
ஆறாத ஆவலை ஆற்றிவிட
நீயும் ஆவல் கொள்வாயென்ற
நம்பிக்கையோடு

நொருங்கி கிடந்த அத்தனை
நம்பிக்கைகளையும்
அள்ளி எடுத்து ஒன்று சேர்த்து
பார்க்கிறேன்.
உந்தன் மனம் என்னை
தேடுமென்ற பேராவலோடு.

எல்லாம் முடிந்து விட்டது
என்று புரிந்தாலும்
மனம் ஏங்கத்தான் செய்கிறது
உன்னிடம் இருந்து
அழைப்பு வராதா என்ற
உச்ச ஆவலோடு

இன்று என்னுள்ளே ஒரு
ஏக்கம் உன்னிடம் பேசி
விட வேண்டும் என்ற ஆவல்!
அழைப்பை எடுத்து பார்த்தேன்
நீங்கள் அழைத்த இலக்கம்
தற்போது பாவனையில் இல்லை
என்ற குரலோடு என்
ஆறுமோ ஆறுமோ என்றிருந்த
உன்மீதான ஆவல்
என்றைக்குமே ஆறாது
என்றுணர்தேன்.

Nada Mohan
Author: Nada Mohan