நகைப்பானதோ மனித நேயம்

வியாழன் கவி 2255

நகைப்பானதோ மனிதநேயம்..

புனிதம் போற்றும் மானிட பூமியில்
புதைந்து போனது மனித நேயம்
உணர்வுகள் அற்றதாய் உறவுகள்
கலந்தாட மறந்தது மகிழ்வு தேசம்..

முதுமையும் தெருவில் அல்லாடுதலும்
முனகலில் பரிதாபம் புரியாமலும்
பிறந்த தேசத்தில் விரட்டப்பட்டும்
பயணத்தில் உயிர் துறப்பதுமானது..

காத்தலும் கை கொடுத்தலும் விலக கருணையும் காத்தலும் மறைய
சிரிப்பும் சிந்தனையும் விலக
ஆயுதமும் அணுகுண்டும் பெருகியது..

விழி நீர் துடைக்க நீளட்டும் கரமது
அழிக்கும் மழை நீரில் காக்கட்டும்
இடரில் இரங்கியே கரை சேர்க்கட்டும்
மனித நேயம் மீள மலரட்டுமே..
சிவதர்சனி இராகவன்
11/12/2025

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading