“நகைப்பானதோ மனித நேயம்”

நேவிஸ் ப்பிலிப் கவி இல(537)
நகைப்பான மனித நேயம்
இன்று உயிர்ப்பானதே
திகைப்பாக உலகையே
உற்று நோக்க வைக்கின்றதே

வேற்றுமையகற்றி
அன்புணர்வினால்
நெஞ்சம் கசிய உயிர்
காக்க விரைந்த பண்பு

தேவைகளறிந்தோராய்
விரைந்தே வந்து
நேசக் கரம் நீட்டி
அல்லல்களகற்றிட்ட மாண்பு

உணவுடை உறையுளென
தக்க சமயத்திலே
பரிவாய் பகிர்ந்தளிக்கும்
மனம் நேயம்”

மனித்நேயம் இன்னும்
உயிர்ப்போடேஉலவிடுதே
நல்லதோர் சாட்சிகளாய்
கண்டோம் நம் தேசத்திலே
நன்றி நன்றி நன்றி,,’,,,,,,,’,,

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading