நத்தார் மலர்விலே

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவிதை நேரத்துக்காக

நத்தார் மலர்விலே..

புலரும் மார்கழித் திங்களின்
வரவே வரமே நத்தார் முகிழ்க்க
யேசு பால்ன் தொழுவத்தில்
தோன்றிய மகிமை உணைத்தி
பூம்பனிப் பொழிவும் புகழுரைக்க
பளபளக்கும் மழைத்துளி முத்தமிட
நத்தார் தாத்தா வந்தே தந்திடும்
வல்ல பல பண்டங்கள் கண்டும்
உறவுகள் ஒன்றாகிக் கொண்டாடும்
நத்தார் பண்டிகை சிறந்திடுமாம்
புதிய ஆண்டை வரவேற்கவே
யாவும் ஒளிமழையில் நனைய
வீதி விளக்குகள் அணிவகுப்பும்
நத்தார் மரத்தின் தலை நிமிர்வும்
பரிசுப்பொருள்களின் குவியலும்
பண்டிகையில் மூழ்கி மகிழ்வதும்
புதிய ஆண்டொன்று பூத்திடுமே
பழையது விடை பெறுமே காணீர்..

சிவதர்சனி இராகவன்
சுவிஷ்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading