நன்றியாய் என்றுமே (727) 04,09.2025

நன்றியாய் என்றுமே Selvi Nithianandan

மண்ணிலே மெல்லவே
அகரத்தை கிறுக்கி
கண்ணிலே நீர்வடிய
கட்டி அணைத்தவர்

அம்மாவின் முந்தானை
கைவிடாத இழுவையும்
அன்பினாலே அள்ளிச்
அரவணைத்த ஆசானும்

கல்வியை ஊட்டியும்
கசடறக் கற்பித்தும்
மண்ணிலே பலரையும்
பெருமிதம் செய்பவரே

நன்றியாய் என்றுமே
நானிலமும் வாழ்ந்திடல்
நல்மதிப்பு கொண்டே
நாணயமாய் இருக்குமே

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading