வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை...

Continue reading

நல்லுறவு

ஜெயம்

இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார்
ஒன்றுக்கொண்று நம்பிக்கையின்
உறவேனவே இருப்பார்
எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுப்பார்
உண்மையான அக்கறையை எந்நிலையிலும் தொடர்வார்

ஒருவரின் வளர்ச்சிக்கு ஒருவர் துணையாவார்
இரு இருதயங்களையும் ஒன்றாக இணைப்பார்
சோதனை வேளையிலே அன்பின் பாலம்
வேதனையை தீர்த்துவிடும் பண்பதுவும் நீளும்

தோழர்களிடயே நல்லுறவு உற்சாகமும் வளர்ச்சியும்
ஆழமான உறவதுவே நிம்மதியும் மகிழ்ச்சியும்
மொத்தத்தில் நல்லுறவால் மனதும் பூத்துவிடும்
அர்த்தமுள்ள வாழ்க்கையை பூமியில் சேர்த்துவிடும்

மனித வாழ்வின் அழகான நூல்
தனிமையை உணராதே மலர்ந்திடும் நாள்
நெஞ்சின் ஒழுக்கமே நல்லுறவாய் வெளிப்பாடு
இஞ்சியும் துயரில்லை புன்னகையே வாழ்வோடு

Author:

வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

Continue reading