நிகரேது செப்பு…

வசந்தா ஜெகதீசன்
அகரத்தின் நிமிர்விலே ஏற்றி
அனுதினம் பாடம் புகட்டி
அனைத்திலும் திறமை தீட்டி
ஆசானாய் போற்றும் தகையே
அகிலத்தின் தொழில்துறை மேன்மை
துலங்கிடும் ஈகைக்கு உவமை
சேவைக்கு நிகரேது உலகில்
மனிதத்தின் மாண்பைப் போற்றி
அகிலத்தை அறிவொளியாக்கி
அநீதிக்கு குரலது எழுப்பும் சமூகத்தின் விழியதுவாகும்
தொழில்களின் துறைசார் அறிஞரும் ஆசான் ஆற்றலின் வசமே
எண்திசை வாழினும் கற்றலில் மிளிர் வார்
வார்ப்புகள் ஒளிரும் வண்ணமாய் தீட்டும் ஆசான் பணிக்கு நிகரேது செப்பு.
மிக்க நன்றி

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading