துளிர்ப்பாகும் வசந்தம்

ராணி சம்பந்தர் குளிரும் கூதலும் குறைந்திடவே பளீரென மனமது நிறைந்திடுதே ஒளிரும் கற்றை கூடிக்குலாவுதே துள்ளிக் குதிக்குது சந்தோஷம் மெல்லத்...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..

சிவருபன் சர்வேஸ்வரி

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..

எண்ணும் எண்ணமெல்லாம் ஈடேறி நின்றிடுமா //
ஏற்றமாக நினைத்தாலும் நினைத்ததெல்லாம் நடந்திடுமா //

நீங்காத நினைவுகள் அலையலையாய் மிதந்துவரும் //

மங்காமல் மனதினிலே அடுக்கடுக்காய் தேன்றிவிடும் //
பொங்கிவரும் கற்பனைகள் புதுயுகத்தை காட்டிவரும்//

நிலைப்பது என்பது கனவாகக் கலைந்துவிடும் //
இலட்சியப் பாதையிலே கலைவைத்து நடக்க நினை //
உண்மையின் நேர்மையைக் கடைப்பிடித்து பின்பற்று //
சோதனையும் வேதனையும் சுற்றியே வந்தபோதிலும் //
சாதிக்கும் சத்தியசோதனை நடந்துகொண்டே இருந்தாலும் //
நினைப்பதெல்லாம் நிறைவேறும் நீயிருந்தால் என்னோடென்று //

தாவியே பாவிவரும் நம்பிக்கை வைக்கும்மனசுக்கு //
உண்மை உறங்காது ஊமையாகினாலும் வெளியாகுமென்பதுபோல் //
நன்மையாக நினைத்தால் நினைப்பதெல்லாம் நடக்கும் //

இதுதான் வாழ்க்கை என்றெண்ணாதே// இப்படித்தான் வாழவேண்டும் என்றவரமே வரப்பிரசாதமாகும்//

சத்தியவழியும் பற்றியவருளும் அப்பழுக்கு இல்லையெனில் //
ஐயமே தேவையில்லை ஐதீகம் உணர்த்தும் உண்மை //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பட்டமரம்... சரித்திரத்தின் உயிர்ப்பு சாதனையின் உழைப்பு இருப்பிடத்தில் இன்று இயங்காது உறங்கும் முதியோர் காப்பகத்தில் முடங்கியே ...

Continue reading