நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..

சிவதர்சனி

வியாழன் கவி 2110

நினைப்பதெல்லாம்
நடந்துவிட்டால்!!

நினைத்துவிட எண்ணிய பொழுது
நினைவினில் எதுவும் இல்லை
நினைவினில் யாவும் வந்த பொழுது
அவை நிரந்தரம் ஆகிடவில்லை

ஆடும் வரை ஆட்டம் அது முடிய
அனைவரும் போவது ஒரே இடம்
நோக்கமில்லா மானிடமும்
நொந்த மனம் கொண்டோருமாய்..

நடத்துவது யாரோ நாடகத்தை
நலம் சிலபேர் வாழ்வும் ஆகும்
நலம் விடுத்து நலிந்தோரும்
வலிகொண்டு வாழ்கிறாரே..

நினைப்பினில் தவறுமில்லை
அது நடக்கவென நினைப்பது
மானிடப் பிழையுமில்லை- விதி
வசத்தில் என்று விடுதல் மதியுமோ?

நடந்து விட்டால் மகிழ்வு தான்
நடக்கா விட்டால் ஏற்றிடவும்
முடங்காது துணிந்து எழுந்திடவும்
நெஞ்சே நீ பழகிவிடு பணி இடு..
சிவதர்சனி இராகவன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading