நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…

நகுலா சிவநாதன்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…

நினைப்பதற்கு எண்ணம் மனதிலே வகுத்து
தினையது முளைப்பதாய் சிந்தனை முளைத்து
பனைபோலப் பெருகி பக்கவமாய் வளர்ந்து
மனைபோலக் கட்டுமே மாண்புமிகு சிந்தனை

சிந்தையின் நினைவும் சிதறும் எண்ணங்களும்
விந்தையாய் உலகில் வினைத்திறன் விளைவே!
சுந்தர வடிவ சுடர்விடும் எண்ணமே
மந்திர வடிவ மாண்புறு செயலே!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…..
மனதிலே மகிழ்வு மாற்றமாய் உருவாகும்
கனவிலே காரியம் காட்சியாய் பெருகும்
குதூகல மெங்கும் பூத்து விரியும்
கூடவே வரவுகளும் கொட்டி கிடக்கும்

நகுலா சிவநாதன் 1797

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading