நியதி

செல்வி நித்தியானந்தன்
நியதி

காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்

வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்

மதியின் நுட்பம்
பலவாகும்
மதித்து வாழல்
முறையாகும்
மறுமை கணக்கு
பதிவாகும்
மரணம் என்றுமே
நியதியாகும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading