ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

நியாயத் தராசு

இரா.விஜயகௌரி
நீதியுதும் நேர்மையதும்
விலை போகா உலகில்
நிலையாக எம் வாழ்வு
வழித்தடம் காண வேண்டும்

சரியாத நேர்மைக்குள் வாழ்ந்தாக வேண்டும்
சாதிக்கத் துணிந்தவர்கள் துவளாதிருந்துவிடல் வேண்டும்
கறைகண்ட நோக்குக்கு கரைந்தெழுதும் கண்ணீர்
நியாயத்தின் தொடுகைதனை கண்டிடவா
முடியும்

நீதி தர தெரியாத மன்னனுக்கு நாளும்
நல்லவன் நீ ஆனாலும் பிறழ்ந்ததேன் என்றே
காலடியில் நின்று நீ – கனவுக்குள் நின்று
இன்று வரை வாழ்ந்ததைத்தான் நீதி யென்பதா

உணரும் வரை உரைத்தெழுந்து உறைக்கும் வரை
உயிர்ப்பெழுதி காண்பதன்றோ நியாயம்
ஐயா நீதிக்கு தலை வணங்கு பணிந்து நீ படிந்தால்
நீதி தேவதைக்கு உன்னிடத்தில் நாட்டமென்ன சொல்வாய்

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading