தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(104). 01 /06/23
ஒன்றிணைவோம்

ஏற்ற இறக்கமில்லா
எதிர் காலம் சமைப்பபதென்றால்
மாற்றம் நடக்க வேண்டும்
தடைகள் உடைய வேண்டும்

வேற்றுமை அகன்று
உணர்வினால் நெஞ்சம் கலந்து
நினைவெல்லாம் ஓரின உணர்வோடு
விரைந்தொன்றிணைய வேண்டும்

நெஞ்சோடு நெஞ்சை
அன்பாள வேண்டும்
நிறைவான நீதி
நின்றாள வேண்டும்

போதையும் மதுவும்
தொலைந்தோட வேண்டும்
நஞ்சாளும் உலகை
வென்றாள வேண்டும்,

ஊரோடு உறவோடு
உறவாட வேண்டும்
சமுதாய ஒன்றிப்பு மலர்ந்திட
கரங்கள் ஒன்றாய்இணைந்திட வேண்டும்,

Nada Mohan
Author: Nada Mohan