பாவை.ஜெயபாலன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 297 விருப்ப தலைப்பு

“ஆழப்புழா “.

உல்லாச படகு சவாரி
ஊர்ந்து நீரில் உலாவி
சல்லாபம் பாடல் ஆடல்
சந்தோஷ குடும்ப உலாவல்

ஆலப்புழா ஊரின் ஓரம்
அமைவு கேரளம் ஆகும்
சோலை நிறை கரை நீளம்
சொர்க்கசுகம் மனத் ஊறும்

தென்னையில்கள்ளு ஊறும்
தெம்மாங்கு நாவே பாடும். தென்றல் சாமரை வீசும்
திடலில் வீடுகள் ஜோரும்.

துடிக்க துடிக்க மீன்கள்
சுட்டுத் தின்ன நெருப் ஏறல்
கடிக்க கொறிக்க சுவைக்க
கள்ளித்து நாக்கு சுவைக்க

தென்றல் இதமாக வீச
திரள்அலை நிலவில் ஓட
மின்மினி மேகத்தில் ஆட
மேனியில் சிலிர்ப்பு மேவ

காதலி மடியிலே சாய
காற்றில் அவள் கேசம் நீள
ஏது தான் இதற் ஈடு என்று
இன்ப கனத்திலே நெஞ்சு.

ப.வை.ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading