மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

பூக்கள் பூத்திடும் வசந்தம்

“ பூக்கள் பூத்திடும் வசந்தம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 11.04.2024

சித்திரையும் வைகாசியும்
செதுக்கி வைத்த சிற்பமாய்
பூக்கள் பூத்திடும் வசந்தகாலம்
பூவையரும் மகிழ்ந்திடும் புத்துணர்வுக் காலம்
சித்தமுடன் கோடைமகளை வரவேற்க
வனப்போடும் செழிப்போடும்
வாசனையோடு வந்துவிட்டாள் வசந்தமகள் !

கண்ணுக்கு விருந்தாகும் பசுமை
கண்கவரும் வசந்தகாலப் பெருமை
மனதிற்கு இசைவான மலர்க்கூட்டம்
மனதினை மயக்கிடும் வண்ண்க் கோலம்
பட்சிகள் இனிய கீதமிசைக்க
வட்டமிட்ட சில்வண்டுகளும்
சட்டெனவே தேனைக் குடித்து மகிழும்
பூக்கள் பூத்திடும் வசந்த காலம் !

கனிதரு மரங்களும் பூத்துக் குலுங்கிட
கவினுறு சோலையும் எழிலைக் கூட்டிட
மனமெனும் மாளிகையும் மகிழ்வினைத் தந்திட
தனமெனவே வந்தாள் வசந்தப் பெண்ணாள்
வரமாய் கிடைத்த வசந்தகாலம்
வாழ்வின் வண்ணப் பொற்காலமே !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading