பெண்

ஜெயம்

பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி
கண்முன் தெரிகின்ற இன்னொரு பிரபஞ்சம்
என்னென்று சொல்வேன் அழகது கொஞ்சும்
தன்னைப்போல படைக்கவென இறைவனவன் படைப்பு
உண்மையாக குவலயத்தின் வரமெனவே கிடைப்பு
உதிரம் பாய்ச்சி உயிர்தரும் தன்மை
புதிரென்றால் பெண்ணன்றோ மலர்களிலும் மென்மை
நாணும் அச்சத்தை தானுமிங்கு கைவிட்டு
ஆணுக்கு நிகரெனவே பெண்ணவளும் புறப்பட்டு
மண்ணென்ன விண்ணின் எல்லையும் தொட்டு
கண்டாளே சரித்திரம் முகவரி இட்டு

Author:

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading