“பேரிடர்”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214

“பேரிடர்”
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!

ஊர்மனைகளுக்குள்
இயந்திர படகுகள்
மக்களை மீட்ட காட்சி
இது என்ன கொடுமை
இது என்ன வறுமை!

காற்றுக்கு
என்ன வேலி
மண்சரிவுக்கு ஏது வாசல்
நீரை தடுக்க
ஏது செய்வம்
விரிந்தினர் போல் வந்து
போகட்டும்!

மண்சரிவு
தொடரும் இடத்தில்
மக்களை குடியமர்த்துவது சரியா?
மலையக தமிழர்
வாழும் நிலப்பரப்பில் ஆண்டாண்டு அழிவின் அவலம்!

மக்கள் தண்ணீர்
வெள்ளத்தில் சிதைந்ததும்
கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கிய காட்சி
சதியா விதியா
சடங்கு செய்யவும் யாரும் இல்லை!

ஆகாயம் கூறும் வாய்மை
யோசிக்கும்
கூர்மை!
நன்றி
வணக்கம் 🙏

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading