பேரிடர்

ஜெயம்

வானம் கிழிந்து மழை கொட்டியதே
ஞாலம் நிறைந்து நீர் முட்டியதே
புயலென மாறிய காற்றதன் சீற்றம்
இயற்கையின் கோர தாண்டவ ஆட்டம்

நீர்வெள்ளத்துள் கிராம் மூழ்கி அழியுது
பார்க்காது மழையும் பேயாய் பொழியுது
காலனாய் மாறிக்கொண்டதே பயங்கரப் புயல்
பாழாய்ப்போன சூறாவளியின் மாய்த்திடும் செயல்

பேரிடர் ஒன்றால் பூமி கொந்தளித்தது
பாரின் மேலே உயிரும் தத்தளித்தது
அடியோடு பாறி மரங்களும் சாய்தன
குடிசைகள் மூழ்கி நீருக்குள் கரைந்தன

பேரிடர் தந்த வலிகளை நீக்க
பிரிவினை மறந்து மனிதமும் பூக்க
அந்த இருட்டிலும் ஒரு ஒளி
சிந்தவே பிறந்தது கருணையின் வழி

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading