தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

போர்க்கோலம்

வணக்கம்
போர்க்கோலம் …
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது உலகு
புதுப்புது ரகத்தில் அணுவாயுதப் பகிர்வு
உதவிடத் துடிக்குதே வல்லரசுகள் வன்மம்
அழிவினைக் காணவே ஆயுதப் பகிர்வும்
பற்பல நாடுகள் பட்டியல் நீளுது
பாரே போர்க்கோலமாய் மாறுது
கணரக ஆயுத தாக்கமே அழிவு
காசினி எங்குமே கதிகலங்கிடும் நிகழ்வு

அணியெனத் திரளும் நாடுகள் கூட்டு
அழிவுக்கு வழியிடும் அனணுவாயுதத் திரட்டு
போர்க்கோல விமானங்கள் திரளுது வானில்
புதுரக ஆயுத தாக்கமே புவியில்
நாளுமே நலியுது
நல்

நிகழ்வுகள்புதையுது
போர்வதை உலகை புதைகுழியாக்குது
போக்கிடமற்றே மனிதத்தை புதைக்குது
வலியின் ரணமாய் வாழ்வின் சுவடாய்!
நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading