மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 265
14/05/2024 செவ்வாய்
குருதிப்புனல்
——————-
நெஞ்ச மெலாம் பதறுது!
நினைவு தடு மாறுது!
அஞ்சு மூன்று கடந்தாலும்,
அந்த வலி குடையுது!

வஞ்சி சேரும் வயதினிலே,
வாழ்வு இழந்து போனவனும்!
மிஞ்சி அணிந்த காலுடனே,
மிதி வெடியால் போனவளும்!

கொஞ்சு மொழிக் குஞ்சுகளும்,
கோல இளம் மங்கையரும்,
பஞ்சுத் தலை முதியோரும்,
பாவம், அவர் செய்த தென்ன!

நஞ்சு நிறை வெடிமருந்தும்,
நாச காரக் குண்டுகளும்,
வெஞ்சினம் கொண்டு வந்து,
வேள்வி செய்து விட்டதையோ!

ஐ. நா.வும் மறந்து நிற்க,
அயலவரும் கை கொடுக்க,
பொய் நாக்கு கொண்டவர்கள்,
பொசுக்கி விட்டார் எம்மவரை!
நன்றி!
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading