மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 297
25/03/2025 செவ்வாய்
“நம்பிக்கை”
——————
இறைவன் அளித்ததோ இரு கை
இங்கு வேணும் இன்னொரு கை
இதயம் தந்திடும் இந்தக் கை
இகத்தில் இதன் பேர் நம்பிக்கை!

பொதிகள் சுமக்கும் இரு இறக்கை
போய் இறங்கும் என்ற நம்பிக்கை!
பொறிக்குள் சிக்கிய நம் வாழ்க்கை
பொறி இயந்திரம் மீதே நம்பிக்கை!

தண்டவாளம் மீதோடும் தொடரூந்து
தடம்புரளாது என்று ஒரு நம்பிக்கை!
சண்ட மாருத வேகத்தில் ஓடிடவே
சமநிலை தழும்பிடும், தவறும் நம்கை!

அயலவர் அறிந்தவர் தரும் கை,
அகத்துள் உள்ளதா என நினை!
ஆண்டவன் தந்திடும் அரும் கை,
அன்பினால் தந்ததே என நினை!

துதிக்கையான் பாதத்தில் வை கை
துவளாதுனை காத்திடும் அவன் கை
நினைக்கையில் வந்திடும் ஒரு கை
நித்தமும் கிடைத்திடும் நம்பிக்கை!

நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading