அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

பழமை

அக்கினிக் குஞ்சுகளின்
ஆலாபனை வயிற்றில்
அந்தரத்தில் ஆடுகிறோம் பசிக்கயிற்றில்
விறகடுப்பை விட்டதனால்
விந்தை மளிகைகள் கட்டியதால்
நொந்துபோய் காத்திருக்கிறோம்
இரவு பகல் எந்திர மனிதராய்
வெறுமை முட்டிய எரிவாயுக் கலன்களுடன்
வரிசை கட்டி நடுவீதிகளில்
இயற்கைப் பசளை விட்டு
இரசாயனம் தொட்டு அதன் வரவு கெட்டதனால் விளைவின்றித் தவிக்கின்றோம்
விலைவாசி ஏறி
மாட்டுவண்டிப் பயணம்
மாட்டமென்று விட்டோம்
தூரம் சென்றிட ஆகாதென்றே துவிச்சக்கரவண்டியை
தூக்கி எறிந்தோம்
தள்ளிச் செல்கிறோம் மாடுகள் போன்றே வாகனங்களை எரிபொருளுகாய்
ஏக்கமுடன்
இன்னும் எத்தனையோ இன்னல் எம் முன்னால்
பழமை மறந்த வகையால்
பழமை பேணின் வருமோ இவ்விடர்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading