விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
மனோகரி ஜெகதீஸ்வரன்
சூரவதை
கந்தபுராணம் காட்டும்கதை
கந்தனின் சூரவதை
தந்தவிதம் தருகிறேனதை
இந்தமுறை கேளுங்களிதை
நொந்தமனது ஆறுவகை
அண்டம்விட்டு அண்டம் பாயும்
அசகாய அசுரனே சூரன்
தண்டனிவும் செய்தான் தேவரை
தனக்குச் செய்யவும் வைத்தான் ஏவலை
வீம்பகற்ற வந்தான் முருகன்
அம்புகள் பலவும் தொடுத்தே
வம்புகள் செய்தான் சூரன்
கடைக்கண் பார்வை கொண்டு
முடைகொடுத்தார் எய்வுக்கு முருகன்
நடைதொய்ந்து நடுங்கினாலும் சூரன்
விடைகொடுக்க மறுத்தான் தேவருக்கு
படைதொடுத்துச் செய்தான் மாயம்
இடையிடையே செய்தான் பெருஜாலம்
எடைகுறைந்து படை விழ்ந்தாலும் விடவில்லைப் பிடிவாதம்
திருப்பெருவடிவு கண்டும்
திருந்தாக் குணமே கொண்டான்
கருப்பொருள் இறையே என்பதையும் மறந்தான்
ஏவினான் சிவன்தந்த இந்திரஜாலத்தேரை
காவிக் கந்தன் சேனையைப்
பிரபஞ்ச உச்சியில் வைக்க
தாவித் தடுத்தது வேல்
தனதாக்கினான் தமிழ் கடவுள்
கூவியோடினான் கடல்நடுவே சூரன்
ஆவிகாக்க மாமரமானான் அசுரன்
தாவி அறுத்தது ஞானவேல்
தரிசனம் தந்தன சேவல் மயில்
பாதகன் வேண்டி வணங்க
சாதகம் எங்கும் மலர
சேவகம் செய்து உய்திட
வாகன மாக்கினான் மயிலை
பாதகம் பறக்க கொடியில் ஏந்தினன் சேவலை
சட்டி (சஷ்டி ) யில்தான் மாவறுதான் கந்தன்
பட்டிதொட்டி யெங்கும் ஆணவக் கருவறுப்பான் கந்தன்
தோட்டியவனே தொழுதெழு கேட்டையழித்துக் காப்பான்
எம்கூட்டை
மனோகரி ஜெகதீஸ்வரன்.
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments
-
By
- 0 comments