“மன்னிப்பு”

நேவிஸ் பிலிப் கவி இல(505)
தவறுவது மனித பலவீனம்
மன்னிப்பது இறை இயல்பு
மன்னிப்பாயா என்ற ஒற்றை வார்த்தை
அர்த்தம் பல நிறைந்த
அற்புத வார்த்தை

உறவுகளிடையே விளையும்
மன உளைச்சல் போக்கும்
உன்னத வார்த்தை

தவறுகளை மறந்து
உறவுகளை மன்னிப்பின்
அது மனை தனில் கட்டப்படும்
உறவுப் பாலம் சந்ததி நடக்க
அன்பினால் இணையும்
உறுதிப் பாலம்

கேட்பதால் கொடுப்பதால்
தாழ்ந்தோர் யாருமில்லை
மன்னிக்க தெரிந்த மனிதன்
இறை குணம் கொண்ட தெய்வீகன்
நன்றி

Author: