மாற்றம் ஒன்றே

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

மாற்றம் ஒன்றே

மாற்றம் ஒன்றே வேண்டும் என்ற கூற்று விடுத்த மானிடர்
சீற்றம் கொண்ட புலம்பல்
பல விதம்

முன்னேற்றம் பெற்று விடாது
சில நாடுகளை அழிக்க வல்லரசுப் பேரினவாதம்
தொண்டு என்ற பேரில்
நாற்று நடும் விதம்

வறிய நாடுகளில் நல் வளம்
சுரண்டிடக் காட்டும் நரிப்
புத்தியோ வேறோர் விதம்

சுற்று வட்டாரத்தை
அப்படி இப்படிக் கொழுவி
விட்டுக் கூத்தாடும் தந்திரம்
மாறிட வேண்டுவது மாற்றம் ஒன்றே.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading