“மாற்றம் ஒன்றே”

நேவிஸ் பிலிப்

சிந்தையில் சிறு மாற்றம்
வாழ்ககையின் பெருமாற்றம்
ஆயிரம் மாற்றங்கள் வந்தாலும்
மாறாமல் வரும் மாற்றம் ஏமாற்றம்

ஆற்றல் என்பதும் காலத்தால்
அடிக்கடி மாறும் கோலத்தால்
நடையுடை பாவனை மாற்றம்
நாளும் மாறும் தோற்றம்

உருவங்கள் மாறலாம்
மாறாத உள்ளம் வேண்டும்
பருவங்கள் மாறலாம்
குறையாத பண்பு வேண்டும்

ஆட்சி மாற்றம் வந்தாலும்
நீதி தடுமாற்றம் கண்டால்
உண்மை மாற்றம்
எங்கே காண்போம்

மாற்றம் ஒன்றே நிலையாகும்
எம்மை நாமே மாற்றி விட்டால்
நாம் எடுக்கும் முடிவொன்றே
நிலையான மாற்றம் தந்து விடும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading