இனிவரும் காலம்..

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய் ஆகிடும் வன்மம்...

Continue reading

மாற்றம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து மாற்றம்

05.09.24
மாற்றம்
ஆக்கம் 328

மாற்றம் வேண்டும்
என்று சீற்றம் காணும்
மனம் நினைக்குது
ஏற்றம் கண்ட காலநிலை கொதித்துச்
சீறிக் கனக்குது

புயலோடு , மண் சரிவு பெருவெள்ளம் பூகம்பம்
கடும் வெப்ப அழிவில்
இறப்பு போராடுது

புதுப் புது நோய் தொற்ற தடுப்பூசி
தொடுத்த வேறு
நோயால் அல்லலுற
மாந்தர் நிலை கூறாகுது

சில நாடுகள் தேர்தல்
தில்லுமுல்லு சீர் கெட்டு
மது போதை உரமாக
மாற்றம் காணாது
மாண்டு போகுது

வல்லரசு நாடுகளோ
ஆயுத விற்பனையில்
சாதனை புடைத்த
போர் விமானக் குண்டு
வீச்சில் துவண்ட
துன்பமோ தூக்கில்
தொங்குது

மாந்தர் மன அழுத்தம்
மன அமைதியின்றிப்
பிறக்கும் குழந்தைகள்
உடல் உறுப்பில் செயல்
இழந்து போராட
வரண்ட வாழ்வில்
திரண்ட மாற்றம் மாற
வேண்டுமே .

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading