ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

முதல் ஒலி செவி வழி

வியாழன் கவி-2241

முதல் ஒலி செவி வழி!!

ஐரோப்பாவின் முதல் ஒலி
அழகியல் அதிசயம் ஆளுமை
செவி வழி விதைத்தது
அகவை மூபத்தொடு ஏழானது!!

சூரியக் கதிரென ஒளிர்ந்து
சுடர் பரப்பி நின்றதே
காற்றலை ஊடகமாய்க் காவி
வந்த குரல்கள் எத்தனை..

உயிர்ப்பையும் உணர்வையும்
உலக அரங்கில் புதுமை செய்து
செவி வழி உட்புகுந்தது
சேதி சொல்லிக் கவர்ந்தது!!

உறவுகளை இணைத்த பெருமை
நிறை படைப்பை ஆக்கிய மகிமை
வாழ்த்துமழை பொழிகிறோம்
இன்னும் பலபத்து நிறையவே!!
சிவதர்சனி இராகவன்
13/11/2025

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading