மூப்பு வந்தாலே…

ரஜனி அன்ரன் (B.A) மூப்பு வந்தாலே… 02.10.2025

வாழ்க்கையின் நியதி வாழ்வியல் தடம்
வரலாற்றின் யதார்த்தம் மூப்பு
காலம் என்றநதி கரைபுரண்டோட
கரைசேரும் படகுதான் மூப்பு
மழலைப் பருவம் நினைவில் மலர
இளமைக் கனவுகள் கதைசொல்ல
முதுமைப் பருவம் முணுமுணுப்போடு நகருமே !

கண்களும் ஒளிமங்கிய தீபமாக
கன்னங்களும் ஒட்டி குழிகளும்விழ
கைகளும் நடுங்க கால்களும் தடுமாற
மூன்றாம் காலும் ஊன்றுகோலாகிட
உடலும் பலத்தை இழக்க உழைத்துக் களைத்தவருக்கு
மூப்பு என்பது ஓய்வுமேடையே !

வாழ்ந்த வாழ்விற்கு சாட்சி
வாழ்வின் வழியில் வந்த அனுபவப்பாடம்
இளமையின் வேகத்தைக் கடந்து
மண்டியிட்டுக் கொள்கிறது முதுமை
முதுமையென்பது யாவர்க்கும் பொதுமை
புதுமையைக் கற்றுத்தரும் ஆசானே முதுமை !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading