மூப்பு வந்தாலே 72

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-10-2025

அனுபவத்தின் நிறைவும்
ஆக்கத்தின் குறைவும்
மாறாத நினைவுகளும்
மறந்துபோன முகங்களும்

அன்றைய பிடிவாதமும்
இன்றைய பொறுமையும
ஓடிய கால்களெல்லாம்
ஓய்வு நாளாகியதும்

நரைத்த கூந்தலின் இழை
நேற்றைய கதை சொல்ல
முகச் சுருக்கமும் கோடும்
முன்னைய சரித்திரம் பேச

ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகையும்
ஆகாரம் உண்கையில்
அலம்பித் தவித்தலும்

முட்டி மோதி வாழ்வும்
முட்டாளெனத் தனை நோவும்
மூப்பு வந்தாலே
முனகலும் தொடர்ந்திடுமே….

Jeba Sri
Author: Jeba Sri