மூப்பு வந்தாலே

ஜெயம்
மூப்பு வந்தாலே இறப்பைப்பற்றி சிந்தனையோ
மூப்பு வந்தாலே பேச்சாலே நிந்தனையோ
முதுமை என்பது பயனில்லாத பருவமோ
முதுமை தீண்டியதால் வலுவிழந்த உருவமோ

மலர்ந்த இளமை வசந்தம் எங்கே
கலங்கியே நாட்கள் முதுமையில் இங்கே
வாழ்க்கை நூலின் இறுதி அத்தியாயம்
நூல் நிறைத்திடும் அனுபவத்தின் மொத்தம்

கைபிடித்து காலம் எதுவரை கூட்டிச்செல்லும் 
கைவிட்டு பயணத்தை எப்போது தள்ளும்
வயதின் இறுதி பக்கங்களும் புரள
பயத்துடன் பார்த்திடும் முதுமையும் மிரள 

மரமென நிழல் தரும் மூப்போரை
வரந்தரும் இறையென இங்கே பார்ப்பாரா
மூத்தோரை சுமையெனவே தாங்குவார்கள் பார்ப்போரும்
மூத்தோரில்லம் அவர்களது கண்ணீர்கதைகள் கூறும்

Author: