மூப்பு வந்தாலே

தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
மூப்பு வந்தாலே,

பட்ட தாரி ஆகி விட்ட நினைப்பு
நான் பகிர்கின்ற அத்தனையும்
பிறர் உள் வாங்க
வேண்டியதே பொறுப்பு
நோய் நொடியால் நாற்காலி
வருமோ என்ற கடுப்பு
நல்லதையே செய்தேன்
என்கின்ற எடுப்பு
எல்லாமே கடவுளின் கையில்
என்ற முணுமுணுப்பு
மௌனத்தை தேடுவதே மிடுக்கு
மூப்பு வந்தாலே வனப்பு!!
நன்றி

Author: