நாடொப்பன செய்
மரணித்தவனே மறுபடி வந்தால்
ரஜனி அன்ரன்
“ வரப்புயர “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 06.07.2023
பொருளாதாரமெனும் வரப்பு உயர உயர
வளங்களும் பெருகப் பெருக
வாழ்வும் சிறக்கும் வனப்பும் பெருகும்
தாழ்நிலை அகலும் தளர்நிலை மறையும்
ஏழ்மை விலகும் ஏற்றங்கள் பெருகும்
வரப்புயர வாழ்வோம் வளமோடு !
பூச்சியத்தில் இருந்து தொடங்கிய வாழ்வு
இராச்சியத்தை அடையக் காட்டியது வழி
கல்வியில் கலையில் வைத்தது உயர்த்தி
வாழ்வியல் பாதையில் தந்தது உயர்ச்சி
பேதமின்றியே தந்தது சலுகை
வேத வாக்காய் கொண்டோம் நாமும்
முதன்மையாக இருந்த வாழும்நாடு – இப்போ
முடக்க நிலையில் மந்தகதியில் பொருளாதாரம் !
உக்ரைன் போரும் எரிவாயுத் தடையும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீடுகளும்
முடக்கியது நாட்டின் பொருளாதாரத்தை
விலைவாசி உயர்வும் பணவீக்கமும் தலைவிரித்தாட
உற்பத்திகள் குறைய சந்தைப்படுத்தல் சரிய
வாழ்வாதாரம் பாதிக்க சரிந்தது பொருளாதாரம்
வரப்புயர வாழ வாழ்வாதாரம் சிறக்க
பொருளாதாரம் எனும் வரப்பு காணவேண்டுமே ஏற்றம் !
