ரஜனி அன்ரன்

“ கைக்குள் கையாக கைத்தொலைபேசி “கவி….ரஜனி அன்ரன்(B.A) 01.02.2024

அலைபேசி யுகமாக
அவசரத் தொடர்புச் சாதனமாக
அண்டத்தையே கைக்குள் தந்து
கண்கவர் வண்ணங்களில்
காத்திரமான நுட்பத்தில்
கைக்குள் கையாக கையடக்கமாக
கைக்குள் தவளும் கைபேசியே
தொழில் நுட்பத்தின் அபாரம் நீ !

இளசுகள் பலருக்கும் உன்னில் மோகம்
இணையில்லை எதுவும் உனக்கு
சிறுசுகள் கைகளில் விளையாட்டுப் பொருளாக
பெருசுகள் பலருக்கும் அரட்டையரங்கமாக
மக்கள் கைகளுக்குள் நீ அடக்கம்
உனக்குள்ளே மக்கள் அடைக்கலம் !

பாதைக்கு வழிகாட்டி நீ
பயணத்திற்கு உறுதுணை நீ
தனிமைக்கும் துணை நீ
தேடலுக்குக் கலைக்களஞ்சியம் நீ
தொடர்பிற்குப் பாலம் நீ
கையிலே தவளும் கைபேசியே
அறிவின் கலங்கரை விளக்கே
அத்தனையும் நீதான் அற்புதமும் நீதான் !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading