ராணி சம்பந்தர்

18.02.25
ஆக்கம் 177
முகமூடி

முகமூடி கொண்ட
உலகமிது
கொள்ளையர் கண்ட
ஆயுதமது
முகமூடி என்றதும்
கள்ளர் ஞாபகம்
வந்திடுமே

கன்னம் வைத்துத் திருட கறுப்புத் துணி
முகமும் மறைய
மூடிடுமே

மானிடர் பற்பல நேரங்களில் பல
கோணங்களில்
அரசியல்வாதி போல்
உண்மை ஒழித்துப்
பொய் உரைத்து
முகத்திரை போட்டிடுவரே

பானையில் எஞ்சிய
சோறு பிள்ளைகளில்
பகிர்ந்தளித்துத் தான்
நீர் அருந்தி வயிறு
நிறைந்து விட்டது எனப்
புன்சிரிப்பு முகமூடி
தருவதும் வறுமை
எனும் கொடுமையின்
அங்கமே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading