வசந்தா ஜெகதீசன்

கைக்குள் கையாய் கைத்தொலைபேசி……
விஞ்ஞானத்தின் விந்தை
விளம்பர யுக்தியின் தந்தை
தொழில்நுட்ப அறிவின் ஆற்றல்
தொடரும் வாழ்வின் போற்றல்
கைக்குள் கையாய் உறையுது
காரியம் ஆற்றியே ஜெயிக்காது
எதற்கும் வழிகள் சுட்டுது
ஏற்றத் தகவல் கிட்டுது
உலகே குடைக்குள் ஓன்றுது
உதவித் தகமை விஞ்சுது
தொடர்பில் பலரை இணைக்குது
தொன்மை முதலாய் துலக்குது
அறிவியல் ஆட்சிச் சிகரமே
அனுதின ஊடகப் பயணமே
எதற்குள் இல்லை தகமை
இணையம் சுட்டும் பெருமை
நூல்கள் தேடல் கல்வி
நூல்நிலையம் ஆற்றும் பணிகள்
உழைப்பின் உறுதி பயிற்சி
தொழிலின் தேடல் தகுதி
அரங்க நிகழ்வின் காட்சி
அனைத்தும் ஊன்றுக்கோலாய்
அவசர உலகின் வாழ்வாய்
அவரவர் அட்சயப் பாத்திரம்
இதற்கும் உண்டு தான் தரம்
வாழ்வும் தாழ்வும் வழியிடும்
கைக்குள் கையாய் உரசிடும்
கைத்தொலைபேசியே பெருவரம்
காலமுதிர்ச்சி ஒடத்தில்
கடந்தும் பயணம் வலுப்படும்
வடிவில் உருமாறிடும்
வரப்பிரசாதமாய் மெய்ப்படும்.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading