வசந்தா ஜெகதீசன்

உயிர்நேயம்…..
மனிதத்தின் நேயமே மாண்புறு வாழ்வு
அகிலத்தை ஆளும் ஆற்றலின்
தோப்பு
அழிவுகள் கண்டு குமுறிடும் நெஞ்சம்
அநீதியின் தீர்வில் கொதித்திடும் உள்ளம்
சேவையின் செதுக்கலில் செம்மையுறும்
உதவிடும் நியதியில் உறுதுணை வரமாய்
காலத்தின் கணதியை கரைத்திடும் பலமாய்
மனிதத்தைப் பேணும் மனதின் உராய்வே
உயிரின் நேயமாய் உணர்வை வருடும்
தினமும் தேவையைத் தேடி உதவும்
நலிவின் சிதைவை நசுங்கி விலத்தும்
நம்பிக்கை நாணயம் வலுப்பெறும் வரம்பே
மனித நேயத்தின் மதியின் கடலே
உளமே ஊற்றாய் ஐக்கியம் பேணும்
உதவும் அகமே ஒளிர்வாய் ஒளிரும்
மனிதவலுவே மாற்றத்தின் திடல்
ஆற்றும் தொண்டே அளப்பெரிது
அகத்தால் ஒன்றுதல் அகிலத்துலகு
உயிரின் நேயமே உலகில் பெரிது.
நன்றி
மிக்கநன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading