கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
புனித ரமலானே
வதனி தயாபரன்
எம் ஜனனமும் மரணமும் இணைக்கும் வாழ்க்கைச் சங்கிலிகள் தொடர்கின்ற நம்பிக்கை
உழைக்கின்ற முயற்சிக்கு போராட்ட வாழ்க்கைக்குள் தேடல்கள் நம்பிக்கை
கனவுக்கு கற்பனைக்கும் நியத்தோடு சங்கமிக்க உணர்வோடு நம்பிக்கை
செயல் புலன் அற்ற தெய்வக் குழந்தைகள் நித்தம் வாழ்வே நம்பிக்கை
அன்றாடம் கூலி வயிற்று புலப்பு காய் வியர்வைத் துளியே நம்பிக்கை
நோய் பிணியில் படுத்தாலும் பாயோடு தேய்ந்தாலும் நாளை விடியும் காத்திருப்பது நம்பிக்கை
ஓடுகின்ற பாதையில் தடைக்கல்கள் ஆயிரம் இருந்தாலும் எட்டுகின்ற இலக்கை தொடும் வரை நம்பிக்கை
தோல்விகளை கை கொடுத்து சோதனைகளை கடந்து சாதனைகளை படைப்பேன் என்று நம்பிக்கை
நம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைத்ததே நம்பிக்கை
நம்பிக்கை விதையை விதைத்து விட்டால் இன்று ஒரு நாள் மரமாகி கனியாகும் காத்திருப்போம்
விடாமுயற்சிக்கு கடின உழைப்பையின் கையிலேந்தி முயற்சி என்று நம்பிக்கையில் ஒளி விளக்கு ஏற்றினால் வாழ்வில் ஒளிமயமாகும்
நன்றி வணக்கம் வதனி தயாபரன்
