வரமானதோ வயோதிபம் 53

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025

வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான ஒளி

வாழ்ந்து காட்டிய வள்ளல்
நலிந்து மெலிந்த உடலும்
நரைத்து சுருங்கிய தோலும்
காலத்திற்கு கிடைத்த அடையாளம்

இறந்த கால நினைவுகளில்
நிகழ்காலத்தை தொலைக்கும் நிம்மதி
எதிர்கால வரப்பை எதிர்பார்த்து
நிகழ்காலத்தை நிகழ்ச்சியாக்கும் அமைதி

கனவுக் காலத்தின் இளைப்பாறலில்
களைப்பும் இருமலும் கலந்துரையாடும்
இறுதிப் பயணத்தின் அமைதியோடிங்கே
வயோதிபமிங்கே மொத்த சாதனையின் வரமே!

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading