வரம்பு மீறாதே

வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ

மனிதம் சிறக்க பழகு மனிதா

புனிதம் அதை உணர்வாய் என்றும்

கவனம் பேச்சில் கண்ணியம் வேண்டும்

புவனம் உன்னை வாழ்த்தவும் நிற்பாய்

வரம்பு மீறாதே வார்த்தை ஆடாதே

எலும்பைப் பொன்னாக்க முடியாது உன்னாலே

கற்றது கையளவு கல்லாதது உலகளவு

காவியத்தை புரட்டாதே காலத்தை மாற்றாதே

நேரத்தை வீணாக்கி நிம்மதியை இழக்காதே

ஏற்கவே பேசு ஏளனம் தேவையில்லை

நோக்கவே நிற்பாய் நோதலும் வீணே

நாகாக்க என்பது நன்மை பயக்குமே

கோள் காவியல்ல கோமக்கள் பாரு
வாள்போன்று வரப்புயர வழியேக வரவேற்பு

சர்வேஸ்வரி சிவரூபன்

Author: