ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வாழ்க்கை

ஜெயம்

சுகங்களின் பிறப்பிடம்
சுமைகளின் மறைவிடம்
இன்பங்களின் உறைவிடம்
துயரங்களின் நீக்கமும் வாழ்க்கை.

அப்பப்பா! வாழ்க்கை ஒரு தத்துவம்
இனிய கவிதை இனிய கதை,
பாசத்தின் களஞ்சியம்
நேசத்தின் வாசஸ்தலம்.

மனமதின் விருப்பு
கற்பனையின் தொகுப்பு
சிந்தனையின் சிருஷ்டிப்பு
கனவுகளின் கோட்டை வாழ்க்கை.

புன்னகையுமுண்டு கண்ணீருமுண்டு
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று,
வரவுமுண்டு செலவுமுண்டு
உறவுமுண்டு பிரிவுமுண்டு.

பாதை போட்டவர் இறைவன்
பயணம் செய்பவர் மனிதர்
வருத்தங்களும் வசந்தங்களும் ஒன்றாய் கலந்த
நட்டமும் இலாபமும் கூடிய குதூகலமே வாழ்க்கை.

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading