விடியாத இரவு

கவிதை இலக்கம் 5
விடியாத இரவு
மஞ்சள் வெயிலின் மென்மைக் கொண்டு
மயிலின் அழகில் பெண்மை செய்து
இமயத்து பனியின் ஒரு பாதிக் கொண்டு
இதயத்துக் கனியாய் கன்னியை செய்து
வெண்ணிலவை சிறிதாய் வாங்கி
பொன்மகளை அதனில் வைத்து
மதி இழந்து நானும் நின்று
முக மதியின் சுடரொளியில் என்
முகத்தில் அவள் முத்திரைப் பதித்து
சப்த நாதங்களும் என்னுள் ஒலிக்க
சற்று நானும் அவளை நோக்க
பித்து பிடித்து பித்தனாய் நின்றேன்
கார் குழல் அவளின் காவியச் சிரிப்பாலே
தேர் போல் நீயும் என்னை கடக்க
தெய்வமாய் நானும் உன்னை வணங்க
அனைத்தும் மறந்து நானும் உறங்க
ஆகாதோ விடியாத இரவாய் என் கனவு
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan