“விடியாத இரவொன்று “

“ விடியாத இரவொன்று “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 14.03.2024

விடியாத இரவென்று
முடியாத நிகழ்வென்று
எதுவுமில்லையே இவ்வுலகில்
மாற்றிடலாம் மனசு வைத்தால்
திடமான மனதிருந்தால்
விடியாத இரவுதனை
விடியலாக்கிப் பார்த்திடலாம் !

கனவுகளைக் கற்பனைகளை
நினைவுகளை நிஜங்களைப்
புதைத்து விடுகிறது
விடியாத இரவுகளும்
புதிரான புதிர்களும்
முடியும் முடியுமென்று
முனைப்போடு செயற்பட்டால்
விடியாத பொழுதுகளை
வெளிச்சம் ஆக்கிடலாம் !

இருள் எனும் பெரும்புயல்
இருட்டடிப்பு செய்தாலும்
பகலவனின் பட்டொளியில்
பாரெல்லாம் ஒளிர்ந்திடுமே
விடியாத இரவுகள் எல்லாம்
விடியல் பொழுதின் எழுச்சியே !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading