துளிர்ப்பாகும் வசந்தம்

ராணி சம்பந்தர் குளிரும் கூதலும் குறைந்திடவே பளீரென மனமது நிறைந்திடுதே ஒளிரும் கற்றை கூடிக்குலாவுதே துள்ளிக் குதிக்குது சந்தோஷம் மெல்லத்...

Continue reading

” விண்ணின் தேவதை “

ரஜனி அன்ரன் (B.A) “ விண்ணின் தேவதை “ 27.03.2025

இந்திய வம்சாவழியில் உதித்த
இலட்சியப் பெண் சுனித்தா
இலட்சியக் கனவை நனவாக்கி
சாதனை படைத்த விண்ணின் தேவதை
மண்ணினை முத்தமிட்டதே மகிழ்வோடு !

விண்வெளியின் மையத்தில்
வெற்றியெனும் விளக்கை ஏற்றி
விண்மீன்களோடு விளையாடி
நிலவோடு உறவாடி
நீந்தினாள் விண்ணுலகை
கட்டியணைத்தாள் விண்வெளியை
தொட்டு விட்டாள் சாதனைச் சிகரத்தை !

நாசாவின் நாயகி நிலாவின் தோழி
நட்சத்திரப் பாதையில் நடந்து
வானின் மறைபுதிர்களை வென்று
வாழ்வின் தடங்களைக் கடந்து
வையகமே கொண்டாடி மகிழ
வானத்தின் வாசலைத் திறந்து
வாழ்வின் வரலாறு எழுதிய விண்ணின் தேவதை
விஞ்ஞான உலகின் ஒளிச்சுடரே !

வசந்தா ஜெகதீசன் பட்டமரம்... சரித்திரத்தின் உயிர்ப்பு சாதனையின் உழைப்பு இருப்பிடத்தில் இன்று இயங்காது உறங்கும் முதியோர் காப்பகத்தில் முடங்கியே ...

Continue reading