விரல் நுனியில் அறிவியல்

நேவிஸ் பிலிப் கவி இல(141) 25/07/24

சுற்றும் உலகின்று
சுட்டு விரல் நுனியினிலே
அறிவியல் தேடல்கள்
கைக் கெட்டும் தூரத்திலே

அன்றைய சாத்தியமற்றவை
இன்றைய சாதனைகளாய்
எங்கும் ஆய்வுகள்
எதிலும் தேடல்கள்

அறிவியல் முறைகள் தேடி
பொறியியல் துறைகள் கற்று
பற்பல நுண்ணறிவில்
அற்புத் சேவையாற்றி

வேகமாய் விரையும் செய்திகள்
தக்க தருணத்தில் தரணியில் பரவ
பக்கமாய் உறவுகள் உள்ளதென
உன்னத உற்சாகம் பொங்கி வர

விரிந்த விண்ணும் மண்ணும்
எல்லையில்லா பரந்த கடலும்
விரல் நுனியில் அடக்கமெனினும்
வளர்ந்து வரும்அறிவியலோடு

கண்ணியம் குன்றா
நன்னியல் வாழ்வும் பெற்று
பண்போடு வாழ்தலும்
கற்றிடல் வேண்டும்.

நன்றி வணக்கம

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading