விழியே கவி எழுது..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2165!!

விழியே கவி எழுது..
விடிந்தது வானம்
முடிந்தது உன் துயரம்
விழிமலர்ந்து எழுக
உன் கவி புனைந்து மகிழ்க..
விரல்கள் இடை புகவில்லை
பேனா மை அது தீரவில்லை
உள்ளங்கை இருப்பாய்
உன் தொலைபேசி
இதழ் விரித்து இன்கவி
புகழ்ந்து விரைக..
கருவெதுவெனக் கருகாதே
கண் விழிக்குள் காவி
வரும் கதை எத்தனை
நீ உதிர்க்கும் கண்ணீர் அது
கட்டியம் கூறுமே- காதல்
அது உன் மீது நீ வை
காலம் எல்லாம் உனைக்
காத்துக் காத்திரமாய்
நீ வாழ்க உனை விட உனை
நேசிக்க யாருளர் வையத்தில்
காலம் காத்திருக்கு
காவியம் நீ வரை வரையென
வளமுடன் புடமிடு புன்னகை…
சிவதர்சனி இராகவன்
12/6/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

Continue reading